

எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ரிகோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இதே நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
இந்திய தொழில்துறை கூட் டமைப்பின் ஆட்டோமேஷன் மற்றும் இமேஜ் பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் இளநிலை பட்டமும் இந்திய பட்டய கணக்காளர் கல்வி நிறுவனத்தில் பயிற்சியும் பெற்றுள்ளார்.
1992-ம் ஆண்டு முதல் 1994 வரை மோடி ஜெராக்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
பிரிண்டிங் துறையில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் தொழிலில் நிலைத்து நிற்க முடியும் என்று கூறுவார்.