டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை: ஜாகுவார் விமர்சனம்

டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை: ஜாகுவார் விமர்சனம்
Updated on
1 min read

டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை விதித்துள்ளதற்கு கடுமை யான விமர்சனங்கள் வந்துள்ள சூழ்நிலையில் டாடாவின் ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) நிறுவனம், டெல்லி சாலையில் செல்லும் புதிய தொழில்நுட்ப கார்களில் இருந்து வெளியாகும் புகையில் இருக்கும் மாசுவை விட உறிஞ்சும் காற்றில் உள்ள மாசு அதிகம் என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் 2,000 சிசிக்கு அதிகமாக உள்ள வாகனங்கள், எஸ்யுவி டீசல் கார்களுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

“புதிய யூரோ 4 கட்டுப்பாட்டு விதிகள் தொழில்நுட்ப அம்சங் களை கொண்டிருக்கிறது. இதன் மூலம் டெல்லியில் மாசுபாட்டைக் குறைக்கலாம். இந்த வாகனங்கள் வாக்வம் க்ளீனரை போல செயல் பட்டு, டெல்லியின் கூடுதல் மாசடைந்த காற்றை உள்ளிழுத்து, அதைவிட குறைந்த மாசை வெளி யிடுகின்றன” என்று ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ப் ஸ்பெத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: இது போன்ற வாகனங்களுக்கு ஏன் தடை விதிக்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. மாசுபாட்டை குறைக்க வேண்டும், காற்றின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று நினைத்தால், பழைய கார்களுக்குத் தடை விதிப்பது, மாசுப்பாட்டை குறைப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பது போன்றவை நிரந்தர தீர்வு ஆகாது. நான் ஓர் இன்ஜினீயர். உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது தொழில்நுட்ப பார்வையில் இந்த முடிவு நியாயமற்றது என்று தெரிவித்தார்.

இந்தத் தடையிலிருந்து மீள ஜாகுவார் நிறுவனம் நிறைய பெட்ரோல் வாகனங்களை வெவ்வேறு வகையான மாடல்களில் கொண்டு வர உள்ளது. ஜாகுவார் ஜேஇ, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் போன்ற பெட்ரோல் கார்களை ஏற்கெனவே ஜாகுவார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in