

டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களை வரிசைபடுத்தி இருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 38 நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கின்றன. இந்த நிறுவனத்தின் 14வது ஆண்டு அறிக்கை இதுவாகும்.
இந்தப் பட்டியலில் அசோக் லேலாண்ட், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், எம்.ஆர்.எஃப்., டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட 38 நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கின்றன.
பட்டியலிடப்பட்ட நிறுவனங் களின் மொத்த வருமானம், நிகரலாபம், சொத்து மதிப்பு உள்ளிட்ட பல காரணிகளை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப் பட்டது. இந்த பட்டியலில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டன்.
இந்தியாவின் கார்ப்பரேட் துறை பரந்து விரிந்ததாக இருக்கிறது. முன்னணி 500 நிறுவனங்களில் 57 துறையை சேர்ந்த நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் இந்திய பொருளாதாரத்துக்கு உதவுபவை என்று என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் பவன் பிண்டால் தெரிவித்தார்.
இதில் 288 நிறுவனங்கள் 10 சதவீத வேலை வாய்ப்பை வழங்குகின்றன. மேலும் இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி). 20 சதவீதம் இந்த நிறுவனங்களில் இருந்து வருகிறது என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்தியா வின் மொத்த ஏற்றுமதியில் 30 சதவீதம் இந்த முன்னணி நிறுவனங்களில் இருந்துதான் வருகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.