

இந்தியா இந்தியா போஸ்ட் பேமன்ட் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கூட்டாக இணைந்து வீட்டு கடன்களை வழங்குகின்றன.
தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் கட்டண வங்கி, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து வீட்டு கடன்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளன.
இதன் மூலம் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியின் 4.5 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீட்டு கடன்களை பெறலாம்.
இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி தனது 650 கிளைகள் மற்றும் 1,36,000 மையங்கள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசியின் வீட்டு கடன்களை வழங்கும்.
தற்போது, இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க், முன்னணி காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து ஆயுள் காப்பீடு பாலிசிகளை வழங்கி வருகிறது.
இரண்டு லட்சம் தபால் ஊழியர்கள் மைக்ரோ-ஏடிஎம் மற்றும் பயோமெட்ரிக் கருவிகளுடன், புதுமையான முறையில் வீடுகளுக்கே சென்று வங்கி சேவைகளை அளித்து வருகின்றனர்.
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் வீட்டு கடன்களை வழங்குவதிலும், இவர்கள் முக்கிய பங்காற்றுவர்.