

பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டாலும், ஐபிஓ வெளியீட்டு விலையை விட 12 பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன. நடப்பு நிதி ஆண்டில் 22 நிறுவனங் கள் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) செய்தன. இதில் 12 நிறுவன பங்குகள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 10 பங்குகள் வெளி யீட்டு விலையை விட குறைவாக வர்த்தகமாகின்றன.
அதே சமயத்தில் இதில் 20 பங்குகள் தங்களுடைய உச்சபட்ச விலையில் இருந்து 20% சரிந்து வர்த்தகமாகின்றன. உதாரணத்துக்கு ஐநாக்ஸ் விண்ட் பங்கு தன்னுடைய உச்சபட்ச விலையில் இருந்து 50% வரை சரிந்து வர்த்தகமாகின்றது. அதேபோல இண்டிகோ பங்கு உச்சபட்ச விலையில் இருந்து 45%, காபிடே பங்கு உச்சபட்ச விலையில் இருந்து 30% சரிந்து வர்த்தகமாகின்றன.
ஒரிரு வாரங்களுக்கு முன்பு டீம்லீஸ் பங்கு பட்டியலிடப்பட்டது. இப்போது பட்டியலிடப்பட்ட விலையை விட உயர்ந்து வர்த்தக மானாலும், இதே நிலையில் தொடருமா என்பது சில நாட் களுக்கு பின்புதான் தெரியவரும்.
நாராயண ஹிருதுலயா, டாக்டர் லால்பாத்லேப்ஸ், எஸ்ஹெச் கெல்கர், அல்கெம் லேப் உள்ளிட்ட பங்குகள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன. இண்டிகோ பங்கு 765 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. 1,395 ரூபாய் வரை சென்ற இந்த பங்கு இப்போது 779 ரூபாயில் வர்த்தகமாகிறது.
காபிடே பங்கு 328 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. இப்போது 32 சதவீதம் சரிந்து 222 ரூபாயில் வர்த்தகமாகிறது. கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் சரிந்திருக்கிறது.
`இதில் பெரும்பாலான நிறுவனங்கள் ஹெல்த்கேர் துறையை சார்ந்தது, எதிர்காலத்தில் இந்த துறையில் வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால் பங்கு விலையில் சரிவு இல்லை’ என வல்லுநர்கள் தெரிவித்தனர்.