

இந்திய பணியாளர்களில் 45 வயதுக்கும் மேற்பட்ட பணியாளர் களில் 61 சதவீத நபர்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல் நிலை ஆகிய காரணங்களால் ஓய்வு பெற இருப்பதாக ஹெச்எஸ்பிசியின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
அதே சமயத்தில் ஓய்வு பெறும் ஆசை இருந்தாலும், 14 சதவீதத் தினர் நிதித்தேவை இருக்கும் கார ணத்தால் வேலையை விட முடி யாது என்று தெரிவித்திருக்கிறார் கள். இந்த ஆய்வு சர்வதேச அளவில் எடுக்கப்பட்டுள்ளது. 17 நாடுகளை சேர்ந்த 18,000 நபர்களிடம் இந்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. அர் ஜெண்டினாவில் 78 சதவீத நபர்கள் விரைவில் ஓய்வுபெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். பிரான் ஸில் 77 சதவீதத்தினரும், சீனாவில் 75 சதவீதத்தினரும், இங்கிலாந்தில் 75 சதவீதத்தினரும் ஓய்வு பெற இருப்பதாக கூறியிருக்கின்றனர்.
உலகம் முழுக்க இருக்கும் மக் கள் ஓய்வுக்கு பிறகு ஒரு வாழ்க்கை இருப்பதை நம்புகின்றனர். அதே சமயத்தில்போதுமான அளவுக்கு நிதி இல்லாததும் அவர்கள் விரைவில் ஓய்வு பெறுவதை தடுக்கின்றது. ஐந்தில் ஒருவருக்கு ஓய்வு பெறுவதற்கான சூழல் இருப்பதில்லை என்று ஹெச்எஸ்பிசியின் ரீடெய்ல் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவு தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.