Published : 04 Sep 2021 03:13 AM
Last Updated : 04 Sep 2021 03:13 AM

புதிய வரலாற்று உச்சத்தில் பங்குச் சந்தை: முதன்முறை 58,000 புள்ளியை கடந்தது சென்செக்ஸ்

மும்பை

இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று புதிய வரலாற்று உச்சங்களை எட்டின. சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக 58,000 புள்ளிகளைக் கடந்தது. அதேபோல் நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 17,311 புள்ளிகளில் வர்த்தகமானது.

பிஎஸ்இ தளத்தில் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீடு நேற்றைய வர்த்தகத்தில் 253 புள்ளிகள் உயர்ந்து 58,115.69 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், டைட்டன், ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி ஆகிய பங்குகள் சிறப்பான ஏற்றம் கண்டதன் காரணமாக சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியது. பிஎஸ்இயில் 1,711 பங்குகள் ஏற்றம் கண்டும், 829 பங்குகள் இறக்கம் கண்டும் வர்த்தகம் ஆயின.

15 துறை குறியீடுகளைக் கொண்ட என்எஸ்இயில் பொதுத் துறை வங்கிகளின் குறியீடு 1.7 சதவீதமும், நிஃப்டி ரியல் எஸ்டேட், தனியார் வங்கி, மீடியா, ஆட்டோ, ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகிய வற்றின் குறியீடுகள் 0.5 முதல் 1.6 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

அதேசமயம் மெட்டல், பார்மா, ஹெல்த்கேர், ஐடி மற்றும் எஃப்எம்சிஜி ஆகியவற்றின் குறியீடுகள் இறக்கத்தில் வர்த்தகம் ஆயின. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகளில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் முதலீட்டாளர் களிடம் காணப்பட்டது.

நிஃப்டியில் அதிகபட்சமாக ஐஷர் மோட்டார்ஸ் 3.15 சதவீதம் ஏற்றம் கண்டது. ஓஎன்ஜிசி, டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, இந்தியன் ஆயில், என்டிபிசி, பாரத் பெட்ரோலியம் ஆகியவை 0.6 சதவீதம் முதல் 1.6 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x