

வியட்நாம் அரசாங்கம் இந்திய நிலக்கடலை இறக்குமதிக்கு விதித்தி ருந்த தடையை நீக்கியது. ஒன்பது மாதங்களாக விதித்திருந்த தடை நீங்கியுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கடலையில் நச்சு பூச்சிகள் இருந்ததையொட்டி இந் தியாவிலிருந்து நிலக்கடலை இறக்குமதி செய்ய வியட்நாம் தடைவிதித்தது. வியட்நாம் அரசின் விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டு துறை அமைச்சகம் இந்திய அரசாங் கத்தை தொடர்பு கொண்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தடையை நீக்குவதாக அறிவித்துள் ளது.
வியட்நாம் அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர். அப்போது நிலக்கடலை ஏற்றுமதி செய்யும் பொழுது ஏற்றுமதி நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதை கண்டு திருப்தி அடைந்தார்கள். அதையொட்டி இந்த தடை நீக்கப்பட் டுள்ளதாக தெரிகிறது.