இ-காமர்ஸ் துறையில் நடப்பாண்டில் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்

இ-காமர்ஸ் துறையில் நடப்பாண்டில் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்
Updated on
1 min read

நடப்பாண்டில் இ-காமர்ஸ் துறை மூலம் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அசோசேம் அமைப்பு கணித்திருக் கிறது.

மேலும் அசோசேம் கூறியதா வது:

பெரும்பாலான இ-காமர்ஸ் நிறுவனங்களின் கடந்த வருட வியாபாரம் உயர்ந்துள்ளது. இந்த வருடம் அந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுப் படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். அதனால் புதிய வேலைவாய்ப்புகள் இந்த துறையில் உருவாகும்.

2009-ம் ஆண்டு இந்திய இ-காமர்ஸ் துறையின் மதிப்பு 380 கோடி டாலராக இருந்தது. வேகமாக உயர்ந்து 2014-ம் ஆண்டு 1,700 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்தது. 2015-ம் ஆண்டு 2,300 கோடி டாலராக இருந்த மதிப்பு 2016-ம் ஆண்டு 3,800 கோடி டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளில், தற்காலிக வேலை, லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரிவு வேலைகளும் அடக்கம். தற்போது 3.5 லட்சம் பணியாளர்கள் இந்த துறையில் உள்ளனர். ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவது, இ-காமர்ஸ் நிறுவனங்கள் செய்யும் முதலீடு உள்ளிட்ட காரணங்களால் இந்த துறையின் வளர்ச்சி உயர்ந்து வருகிறது.மொத்த இ-காமர்ஸ் வணிகத்தில், மொபைல் காமர்ஸின் பங்கு 20 முதல் 25 சதவீதம்தான் உள்ளது. இந்த பங்கு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்பிஏ மாணவர்கள் ஆலோ சனை மற்றும் நிதிச்சேவைகள் பிரிவில் பணிபுரிய விரும்புவார்கள் என்று கூறப்பட்டாலும், ஐஐஎம் உள்ளிட்ட முக்கிய நிர்வாக கல்லூரிகளில் படிக்கும் மூன்றில் ஒரு எம்பிஏ மாணவர் வளர்ந்து வரும் இ-காமர்ஸ் துறையில் பணிபுரிய விரும்புகின்றனர் என்று அசோசேம் தெரிவித்திருக்கிறது.

பொதுவாக வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் அடுத்த இரண் டாண்டுகளுக்கு 60% முதல் 65% வரையிலான வளர்ச்சி இருக்கும். இதன் மூலம் 5 முதல் 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக லாம். உலகில் மிகப் பெரிய இ-காமர்ஸ் சந்தையை இந்தியா கொண்டிருக்கிறது. தொழில் நுட்பம், புதுமை, லாஜிஸ்டிக்ஸ், நுகர்வோர் உள்ளிட்ட பல பிரிவுகளில் மற்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறோம் என்று அசோசேம் அமைப்பின் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in