Published : 28 Aug 2021 04:11 PM
Last Updated : 28 Aug 2021 04:11 PM

‘ஒரே நாடு ஒரே வாகனப் பதிவு எண்’- பிஎச் வரிசை எண் அறிமுகம்

புதுடெல்லி

வாகன உரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் பிஎச் என தொடங்கும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் போக்குவரத்து வாகன விதிகளின்படி ஓராண்டிற்குள் மறு பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிவுடன் அந்த மாநிலத்திற்கான சாலை வரியையும் உரிமையாளர்கள் கட்ட வேண்டும்.

தொழில் மற்றும் வேலை ஆகியவை காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறும் நிலை தற்போது பலருக்கு நிலவி வருகின்றது. அவ்வாறு மாறுவோர்களில் பலர் தங்களின் வாகனத்தை அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு பதிவை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வந்தனர்.

இந்தநிலையில் புதிய பாரத் வரிசை என்கிற புதிய பதிவு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின்படி பிஎச் வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தப் பதிவின் கீழ் மோட்டார் வாகன வரி கூடுதலாக இருக்கும்.

இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை, வேறு எந்த மாநிலத்திலும் அதே பதிவெண்ணுடன் 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் பின், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தங்கள் வாகன எண்ணை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் அலைச்சலைத் தவிர்க்கும் நோக்கில், வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது, மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் 'பிஎச் - பாரத் தொடர்' (BH - Bharat series) எனத் தொடங்கும் பதிவு எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x