ஜன்தன் 7 ஆண்டுகள் நிறைவு; 43.04 கோடி வங்கிக்கணக்கு; ரூ.1,46,231 கோடி வைப்புத் தொகை

ஜன்தன் 7 ஆண்டுகள் நிறைவு; 43.04 கோடி வங்கிக்கணக்கு; ரூ.1,46,231 கோடி வைப்புத் தொகை
Updated on
1 min read

ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் 43.04 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வங்கிக்கணக்கும், ரூ.1,46,231 கோடி வைப்புத் தொகையும் இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, 2014-ல் தனது சுதந்திர தின உரையில் ஜன்தன் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தை ஆகஸ்ட் 28-ல் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தீய சக்திகளிடமிருந்து ஏழைகளுக்கு சுதந்திரம் வழங்கும் இந்த நிகழ்வு, திருவிழாவாக கொண்டாட வேண்டிய தருணம் என்று தெரிவித்தார்.

பிரதமரின் ஜன்தன் திட்டம் என்பது, நிதி சேவைகள் கிடைக்கச் செய்வதை உறுதிசெய்வதற்கான திட்டமாகும். இதில், வங்கி சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்குகள், பணம் எடுப்பது, கடன், காப்பீடு, ஓய்வூதியம் ஆகிய நிதி சேவைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

குறைந்த செலவில் நிதி சேவைகள் மற்றும் நிதி திட்டங்களை கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவதும், குறைந்த செலவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் அதனை பெரும்பாலான மக்களுக்கு விரிவுபடுத்துவது ஆகிய இதன் அடிப்படை கொள்கைகளாகும்.

ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 7 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 43.04 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வங்கிக்கணக்கும், ரூ.1,46,231 கோடி வைப்புத் தொகையும் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in