

மரத்தாலான பொருள்கள் தயாரிப்புத்துறையின் சர்வதேச கண்காட்சி பெங்களூருவில் இம்மாதம் 25-ம் தேதி நடை பெற உள்ளது. பிப்ரவரி 29-ம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இத்துறையில் பயன்படுத்தப்படும் அதி நவீன கருவிகள் குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட புதிய கருவிகள் இக்கண்காட்சியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்திலான இயந்திரங்கள், சிறிய ரகக் கருவிகள், மர சட்டங்களை இணைக்கும் பொருள்கள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளது. தமிழகத்திலிருந்து இத்துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடந்த 20 ஆண்டு களாக நடைபெறும் இக்கண் காட்சி இந்தியாவுட் என்ற பெயரில் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இந்தியாவில் 17 மாநிலங்களி லிருந்தும், இலங்கை, நேபாளம், மத்திய கிழக்கு, மலேசியா, மியான்மர், பூடான், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்பட 40 நாடுகளிலிருந்தும் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.