

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களின் ஆதார் எண்ணை வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களின் ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும், இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.
இந்தநிலையில் ஆதார் எண்ணை வைப்பு நிதி கணக்குடன் இணைப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் இபிஎப் இணையதளத்துக்கு செல்ல வேண்டும். https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
உங்கள் UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழைந்திடுங்கள்.
மெனுவில் இருக்கும் "Manage" என்பதைக் கிளிக் செய்து, KYC என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
KYC பகுதியை கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்குச் செல்லும், இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏற்கெனவே ஆதார் எண்-ஐ இணைத்திருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
ஆதார் எண் இணைக்கப்படாத பட்சத்தில் ஆதார் எண் என்ற பகுதியை கிளிக் செய்து பெயருக்கு அருகில் இருக்கும் கட்டத்தில் உங்கள் ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள்.
ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள், அதன் பிறகு Save என்பதைக் கிளிக் செய்யுங்கள். பின்னர் தொலைபேசிக்கு ஓடிபி வரும். அதனை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் அலுவலகம் ஒப்புதல் அளித்தவுடன் அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் அப்ரூவ் என்ற தகவல் வரும். உங்கள் பக்கத்தில் ஆதார் எண் இணைப்பு தெரியும்.