ஐடி சேவையில் உலகின் சக்தி வாய்ந்த நிறுவனம் டிசிஎஸ்

ஐடி சேவையில் உலகின் சக்தி வாய்ந்த நிறுவனம் டிசிஎஸ்
Updated on
1 min read

இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், தொழில்நுட்ப நிறுவனங்களின் தர வரிசையில் உலக அளவில் சக்தி வாய்ந்த பிராண்டாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.

உலக அளவில் அதிக மதிப்பு மற்றும் சக்தி வாய்ந்த 1,000 நிறு வனங்களை ஆண்டு தோறும் ‘பிராண்ட் பைனான்ஸ்’ பட்டியலிடு கிறது. இந்த பட்டியல் நிறுவனங் களின் பல்வேறு தர அளவுகள் அடிப்படையில் அமையும். அனை வருக்கும் பரிட்சையமான பெயர், விசுவாசம், மற்றும் ஊழியர்களின் திருப்தி மற்றும் நிறுவனத்துக்கு உள்ள புகழ் இவற்றின் அடிப்படை யில் பெறும் புள்ளிகள் அடிப்படை யில் தர வரிசைப்படுத்தப்படும். இந்த புள்ளிகள் அடிப்படையில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் 78.3 புள்ளிகளுடன் தகவல் தொழில்நுட்ப சேவை துறையில் மிகவும் சக்திவாய்ந்த பிராண்டாக வளர்ந்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு வாடிக்கையாளர் சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருவது காரணம் என்றாலும், இந்த புள்ளி விவரங்களை ஆராய்கிறபோது பிராண்டுக்கான முதலீடு, ஊழியர் களின் திருப்தி போன்ற காரணங் களும் இந்த தரவரிசை புள்ளிகள் அதிகரிக்க முக்கிய காரணம் என்று பிராண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ஹைக் கூறியுள்ளார்.

ஐடி சேவை துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக வளர்ந்து, மறுக்க முடியாத பிராண்டாக உருவாகியுள்ளது என்றும் ஹைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து துறை நிறுவனங்களையும் பொறுத்த வரையில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் சக்தி வாய்ந்த பிராண்டாக தர வரிசைப்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனமாகவும் ஆப்பிள் உள்ளது.

ஐடி சேவைத்துறையில் கடந்த 6 ஆண்டுகளில் டிசிஎஸ் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக சேவை செய்ய வேண்டும் இதுதான் நிறுவனத்தின் இதயமாக கருதுகிறோம். இது தான் எங்கள் பிராண்ட் வளர்ச்சிக் கும் முக்கிய காரணமாக உள்ளது. நிறுவனத்தின் 3.44 லட்சம் பணி யாளர்களும் சிறந்த பிராண்ட் தூதர் களாக உள்ளனர். இவர்கள்தான் ஐடி சேவைத்துறையில் மிக வலிமையான நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனத்தை முன்னணிக்கு கொண்டு வர உதவியவர்கள் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான என்.சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in