Last Updated : 02 Feb, 2016 10:24 AM

 

Published : 02 Feb 2016 10:24 AM
Last Updated : 02 Feb 2016 10:24 AM

உற்பத்தி துறை குறியீடு 51 புள்ளியாக உயர்வு

இந்திய உற்பத்தித் துறை குறியீடு ஜனவரி மாதத்தில் 51.1 புள்ளியாக உயர்ந்துள்ளது என்று நிக்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய உற்பத்தித்துறை, தனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் தங்களது விரிவாக்க வேலைகளை தொடங்கியுள்ள தால் ஜனவரி மாதத்தில் உற்பத்தி துறை வளர்ச்சி அதிகரித்துள்ளது என்று தொழில்துறை ஆய்வு நிறுவனமான நிக்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட நிக்கி உற்பத்தித்துறை வளர்ச்சி குறித்த ஆய்வில், டிசம்பர் மாதம் 49.1 புள்ளியாக இருந்த உற்பத்தி துறை வளர்ச்சி, ஜனவரி மாதத்தில் 51.1 புள்ளியாக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சீரான வளர்ச்சியில் இருந்த உற்பத்தித்துறை கடந்த 4 மாதங்களில் மிக அதிக அளவாக ஜனவரி மாதம் உயர்ந்துள்ளது என்று ஆய்வு கூறியுள்ளது.

இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் குறித்து பேசிய பொரு ளாதார வல்லுநரும், இந்த அறிக்கையை தயாரித்தவருமான பாலியானா டி லிமா, 2016-ம் ஆண் டின் தொடக்கத்தில் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள் ளதைப் பார்க்க முடிகிறது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்களுக்காகவும், இந்திய முன்னணி நிறுவனங்கள் தங்களது டிசம்பர் மாத சரிவை ஈடுகட்டும் விதமாகவும் உற்பத்தியை அதிகரித்ததும் உற்பத்தித் துறை வளர்ச்சிக்குக் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். விரிவாக்கம் மேற்கொண்ட 50க்கு மேற்பட்ட முக்கிய நிறுவனங்களையும் பட்டியலிட்டார்.

அதேசமயம் இந்த வளர்ச்சி விகிதத்தின் போக்கை ஒப்பிட வேண்டும் என்றால், நீண்ட கால நோக்கில் அடுத்தடுத்த வாரங்களில் சராசரி அளவை எட்டும்போதுதான் ஒப்பிட முடியும் என்றவர், உற்பத்தி துறையின் ஜனவரி மாத வளர்ச்சி என்பது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை படம் பிடித்து காட்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். என்றாலும், ரிசர்வ் வங்கியின் பிப்- 2016 நிதிக் கொள்கையில் தளர்வை தொடர வேண்டும் என்றும் பாலியானா குறிப்பிட்டுள்ளார். ரெப்போ ரேட் விகிதம் 6.75 சதவீதத்திலேயே தொடரும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

ஜனவரி மாதத்தில் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகி யுள்ளது. மேலும் உற்பத்தித் துறையில் தேவையற்ற அழுத் தங்கள் குறைந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x