

டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ. 112.55 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ. 23.48 கோடியை நஷ்டமாக எதிர்கொண்டிருந்தது.
நிறுவனத்தின் வருமானம் ரூ. 938.81 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 276 கோடியாக இருந்தது. உள்நாட்டு விற்பனை வருமானம் ரூ. 559.93 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 132.85 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் ஏற்றுமதி வருமானம் ரூ. 356.33 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி வருமானம் ரூ. 135.02 கோடியாக இருந்தது. ஒரு பங்கு ஈட்டும் வருமானம் ரூ. 5.36 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 1.12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.