

நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள விஏ டெக் வாபாக் நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 15 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட 200 சதவீதம் அதிகமாகும்.
முதல் காலாண்டில் நிறுவனம் ரூ. 1,448 கோடி மதிப்பிலான ஆர்டரை கைவசமாக வைத்துள்ளது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 52 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. 658 கோடியை எட்டியுள்ளது.
தற்போது நிறுவனத்தின் வசம் ரூ. 10,400 கோடி பணிக்கான ஆர்டர்கள் கைவசம் உள்ளது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல் தெரிவித்துள்ளார்.