

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசியில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு 12.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த நிறுவனத்தில் எல்.ஐ.சி.யின் பங்கு 9.08 சதவீதமாக இருந்தது. கடந்த ஜூலை 25,2015 முதல் பிப்ரவரி 24,2016 வரையிலான காலகட்டத்தில் 3.90 சதவீத பங்குகள் உயர்த்தப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு முடிந்த என்டிபிசி பங்குவிலக்கலில் வாங்கிய பங்குகளும் இதில் அடங்கும். என்டிபிசி பங்குவிலக் கலில் நிறுவன முதலீட்டாளர் களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில் 63 சதவீத பங்குகளை காப்பீட்டு நிறுவனங்கள் வாங்கின. இதில் அதிக பங்குகளை எல்.ஐ.சி. வாங்கியது. மொத்தம் 41.22 கோடி பங்குகள் விலக்கிக் கொள்ளப் பட்டன. இதில் 24.31 கோடி பங்குகளை எல்.ஐ.சி. வாங்கியுள்ளது.