

ஆன்லைன் ரியல் எஸ்டேட் முன்னணி நிறுவனமான ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2015 அக்டோபர் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.
சர்வதேச அளவில் இணையம் மற்றும் நிதிச் சேவை சார்ந்த துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றியுள்ளார். வளரும் துறைகளை மேம்படுத்துவதில் வல்லுநர்.
ஐஐஎம் கொல்கத்தா மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை கல்வி முடித்தவர், காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் கல்வியில் சான்றிதழும் பெற்றவர்.
எவர்ஜென்ட், மீடியா பூஸ்ட், எம்.ஜே கன்சல்டன்ஸ் நிறுவனங்களில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
யாகூ நிறுவனத்தில் நிதித்துறை அதிகாரியாகவும், சிட்டி வங்கியில் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் துணைத் தலைவராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.
டிராவல் டிக்கெட் இந்தியா, ஈவ்னிங் பிளேவர் உள்ளிட்ட பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருந்தவர்.