Published : 04 Aug 2021 02:42 PM
Last Updated : 04 Aug 2021 02:42 PM

இந்திய சந்தையில் ஓராண்டுக்குள் ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள்: நிதின் கட்கரி

வாகன உற்பத்தியாளர்களைச் சந்தித்த நிதின் கட்கரி ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை ஒரு வருடத்திற்குள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தினார்

தனியார், வர்த்தக மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளின் குழுவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்தார்.

வாகனத் தொழிலின் தற்போதைய நிலை குறித்து அமைச்சரிடம் விளக்கியக் குழு, பிஎஸ்-6 பகுதி-2, கேஃப் பகுதி 2 உள்ளிட்ட மாசு சார்ந்த ஒழுங்குமுறைகளை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டது.

100 சதவீத எத்தனால் மற்றும் பெட்ரோலில் இயங்கக்கூடிய ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை ஒரு வருடத்திற்குள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துமாறு கட்கரி வலியுறுத்தினார்.

வாகன பொறியியலில் சிறப்பாகச் செயல்படுவதற்காக நிறுவனங்களை பாராட்டிய அமைச்சர், பயணிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு அனைத்து வகை வாகனங்களிலும் குறிந்தபட்சம் 6 காற்றுப்பைகளை (ஏர்பேக்) வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாகவும், இதன் தொடர்ச்சியாக மற்றொரு சந்திப்பு இரு வாரங்களுக்குள் நடத்தப்படலாம் எனவும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x