

உலகின் கணிணி தேடுபொறி நிறுவனமான யாகூ 15 சதவீத பணியாளர்களை நீக்கத் திட்ட மிட்டுள்ளதாக செய்தி வெளிவந் துள்ளது. யாகூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மரிஸா மேயர், நிறுவனத்தின் செலவினங் களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகி றார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 15 சதவீத பணியாளர் களை நீக்க திட்டமிட்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையால் 1,600 பேர் வேலை இழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் யாகூ நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள பல்வேறு அலுவலகங்களையும் மூட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
யாகூ நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவுகள் வந்த பிறகு இந்த நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படலாம். எந்தெந்த அலுவலகங்கள் மூடப்பட உள்ளன என்பது இன்னும் வெளியாக வில்லை. இதுகுறித்து யாகூ நிறு வனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து ஏதும் கூறவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை யாகூ நிறுவனத்தில் 11,000 ஊழி யர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,500 முழுநேர ஊழியர்கள் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது
யாகூ நிறுவனம் தனது தேடு பொறி, செய்திகள், விளையாட்டு இணையதளங்கள், இ-மெயில் சேவை உட்பட இண்டர் நெட் தொழிலை விரிவு செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது. ஆல்பபெட், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் யாகூ நிறுவனத்திற்கு போட்டியாக இருந்து வருகின்றன. இதனால் யாகூ பங்குகள் 1.2 சதவீதம் வரை சரிந்தன.