Last Updated : 04 Feb, 2016 10:36 AM

 

Published : 04 Feb 2016 10:36 AM
Last Updated : 04 Feb 2016 10:36 AM

விண்வெளி ஆய்வு துறையில் ரிலையன்ஸ் முதலீடு: அனில் அம்பானி தகவல்

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்புத் துறை யில் முதலீடு செய்யத் திட்டமிட் டுள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று இந்த தகவலை அறிவித்த குழும தலைவர் அனில் அம்பானி, பெங்களூருவில் விண்வெளி ஆய்வில் ரிலையன்ஸ் குழுமம் ஈடுபட உள்ளதாகவும் இதற்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையம் பெங்களூருவில் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த மையத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சி துறையில் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதியாகும் என்றார்.

மேலும் கர்நாடகாவில் பரவலாக பல இடங்களிலும், தொடர்ச்சியாக பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக முதலீடுகள் மேற்கொள்ள உள்ளதாகவும், குறிப்பாக தொலைத் தொடர்பு, மின்சாரம், பொழுதுபோக்கு, நிதிச் சேவைகள் துறைகள் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்து 5,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். கர்நாடக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அம்பானி இதனை குறிப் பிட்டார். விண்வெளி ஆய்வு சார்ந்து திருபாய் அம்பானி பெயரிலான ஆய்வு மையத்தை அர்ப்பணிப் பதாகவும் கூறினார்.

ரிலையன்ஸ் குழுமம் புதிய முயற்சிகளில் ஈடுபட உள்ளது. பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. “பெங்க ளூரு ஸ்பிரிட்” என்று சொல்லும் அளவுக்கும் கல்வி மற்றும் வளரும் தொழில்நுட்ப துறைகளில் புதுமைகளை உருவாக்கும் குறியீடாக பெங்களூரு உள்ளது. தொழில்நுட்ப துறையின் வளரும் நகரமாக உள்ள பெங்களூருவின் புறநகரான வொயிட்பீல்டு பகுதியில் இந்த ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

விண்வெளி ஆராய்ச்சி துறை எப்போதுமே, தொழில்நுட்ப வளர்ச்சியை வேகமான மாற்று வதில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாக உள்ளது. ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை பேசிக் கொண்டிருக்கும் போது, ஆறாவது தலைமுறை விமான தொழில்நுட்பங்கள் குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளோம் என்றார். கடந்த ஆண்டு ரிலையன்ஸ் குழுமம் திருபாய் அம்பானி விண்வெளி பூங்காவை அறிவித்தது. 400 ஏக்கர் பரப்பளவில் நாக்பூர் விமான நிலையம் அருகே இதை அமைத்தது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுக்குத் தேவையான கருவிகளை தயாரிக்க இங்கு தேவையாக கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன.

விண்வெளி ஆய்வு துறைக்கு தேவையான விமான உற்பத்திக்கு முக்கிய பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களை இந்த பூங்கா ஒருங்கிணைத்து வருகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x