Published : 24 Feb 2016 09:37 AM
Last Updated : 24 Feb 2016 09:37 AM

இவரைத் தெரியுமா? - ரவி உப்பல்

* ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

* இதற்கு முன் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர். இதே நிறுவனத்தில் நிரந்தர இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

* 2007-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஏபிபி நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்தவர். இதே நிறுவனத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

* 1996 முதல் 2001 வரை வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

* இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தேசிய தொழில்துறை கொள்கை குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

* டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பி.டெக் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x