Published : 17 Feb 2016 10:08 AM
Last Updated : 17 Feb 2016 10:08 AM

ரூ.500க்கு ஸ்மார்ட்போன்: ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிமுகம்

ஸ்மார்ட்போன் தயாரிக்கும் இந்திய நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ் மிகக்குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. ரூ.500 விலையிலான ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப் படுதுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் முயற்சி களின் தொடர்ச்சியாக இதை அறிமுகப்படுத்துகிறோம் என்று கூறியுள்ள நிறுவனம், வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த மலிவு விலை ஸ்மார் ட்போன்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிறுவனம் நொய்டாவில் அமைந்துள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ‘ஃபிரீடம் 251’ என்கிற இந்த போனை இன்று அறிமுகப்படுத்த உள்ளார். அனை வரும் வாங்கும் விலையில் ரூ.500க்கு இந்த போன் விற்பனை செய்யப்படும். தற்போதைய நிலையில் ரூ.1,500 வரை விலையில் யிலான ஸ்மார்ட் போன்கள் சந்தையில் கிடைத்து வருகிறது. டேட்டாவைண்ட் நிறுவனம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து ரூ.999க்கான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் சூடுபிடிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு தொடங் கப்பட்ட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் முதல் ஆலை, இந்தியாவிலேயே உற்பத்தி செய் யப்படும் பாகங்களைக் கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியது.

இந்திய மொபைல் சந்தையில் புதிதாக நுழைந்துள்ள இந்த நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போன்களை ரூ.2,999க்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக அளவில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையை விடவும் பெரிய சந்தையாக உருவாகும் வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களில் சர்வதேச அளவிலான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் களான ஜியோமி, மோட்டோரோலா, ஜியோனி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஒருங்கிணைப்பு ஆலைகளைத் தொடங்கியுள்ளன. மத்திய அரசு `மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஊக்கம் கொடுத்து வருகிறது என்பதும் முக்கியமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x