

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக் குச் சொந்தமான ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சொத்து களை பாதுகாக்கும் பணியில் 16 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் இந்தப் பணிக் குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கார்கில் யுத்தத்திலும், குஜராத் மாநிலம் அக்ஷர்தாம் ஆலயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் பணி யில் ஈடுபட்டவர்களும், மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை முறியடித்தவர்களும் உள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் குளோபல் கார்ப்பரேட் செக்யூரிட்டி (ஜிசிஎஸ்) எனும் பிரிவை உருவாக்கி யுள்ளது. இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். நிறுவனத்தின் சொத்துகள், தகவல் களை பாதுகாப்பும் பணியில் இவர் கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எதிர் காலத்தில் நிறுவனம் எதிர்கொள் ளும் சவால்களை வரையறுத்து அதற்கேற்ப இந்த பிரிவினர் செயல்படுவதற்கான வழிகளை தகவல் தொழில்நுட்பக் குழு தயாரிக்கிறது.
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலை உலகிலேயே மிகப் பெரியதாகும். இந்த ஆலைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த ஆலைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்ததைத் தொடர்ந்து சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்த ஆலையின் பாதுகாப்பு மொத்தம் 200 சிஐஎஸ்எப் வீரர்களை மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால் உண்மையில் 2,000 வீரர்கள் தேவைப்படுகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் சொத்துகள் உள்ளதால் அதைப் பாதுகாக்க அதிக எண்ணிக்கையிலான பாது காவலர்கள் தேவைப்படுகின்றனர். எனவே அத்தகைய இடங்களில் ஜிசிஎஸ் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.
தொழில்நுட்ப ரீதியிலான குழுவினர் பாதுகாப்புப் பணியை எளிமையாக்குவதற்கான தொழில்நுட்பங்கள் அதாவது விரல் ரேகை பதிவு உள்ளிட்ட அடையாளம் காணும் முறைகளை வழங்குவர். மேலும் ஒட்டுமொத்த கண்காணிப்பு பணி மற்றும் தேவைக்கு தகுந்தபடி செயல்படுவதற்கான தீர்வுகளை வழங்குவர்.
பாதுகாப்புப் பணியை தொழில் ரீதியில் செயல்படுத்த ரிலையன்ஸ் பாதுகாப்பு நிர்வாக கல்வி மையம் (ஆர்எஸ்எஸ்எம்) எனும் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து 110 கி.மீ. தொலைவில் நகோதானே எனுமிடத்தில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோரின் உடல் தகுதி, பணி கட்டுப்பாடு, பாதுகாப்பு சார்ந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்துக்குத் தேவைப்படும் பணிவான தன்மை, தகவலை வெளிப்படுத்தும் திறன், மேலாண்மைத் திறன் உள்ளிட்டவை கற்றுத் தரப்படும்.
இந்த குழு நிறுவன சொத்துகளை பாதுகாப்பது மட்டுமின்றி நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி, இந்தியன் கால்பந்து லீக் (ஐஎஸ்எல்) உள்ளிடவற்றுக்கும் பாதுகாப்பளிக்கும்.