Published : 27 Jul 2021 09:02 PM
Last Updated : 27 Jul 2021 09:02 PM

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போனுக்கு வட்டி இல்லா கடன் வசதி: முத்தூட் ஃபின்கார்ப் அறிவிப்பு

சென்னை

கல்வி கற்க மாணவர்கள் ஸ்மார்ட்போன் வாங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இப்போது மாணவர்களுக்கு இணையவழி கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில் ஏழை மாணவர்கள் ஸ்மார்ட்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் ``வித்யா தன்'' என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் தெரிவித்துள்ளார்.

முன்னுரிமை அடிப்படையில் முதலில் வரும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு நிறுவனத்தின் 3,600 கிளைகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி பள்ளி அடையாள அட்டையின் நகலை விண்ணப்பதுடன் சமர்ப்பித்து கடன் பெறலாம். இந்தக் கடனை 6 மாத காலத்தில் திரும்பச் செலுத்த வேண்டும். இதற்கு பரிசீலனைக் கட்டணம் கிடையாது.

முதல் மூன்று மாதங்களுக்கு வட்டி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரு மாணவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x