

இந்தியாவில் மொத்த பணவீக்கம் ஜனவரி மாதத்தில் சற்று குறைந்துள்ளது. உணவு பொருள் விலை குறைவு மற்றும் எரிபொருள் விலை குறைவு காரணமாக மொத்த பணவீக்கம் ஜனவரி மாதத்தில் சற்றே குறைந்துள்ளது. நேற்று வெளியான மொத்த விலை புள்ளிவிவரங்கள்படி இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் -0.90 சதவீதமாக குறைந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் -0.73 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் ஆண்டு மொத்த பணவீக்கம் ஒப்பீட்டளவில் கடந்த 2015 ஆம் ஆண்டு -0.95 இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த பணவீக்கத்தைத் தொடர்ந்து உணவு பணவீக்கமும் குறைந்துள்ளது. தற்போதைய உணவு பணவீக்கம் 6.02 சதவீத மாக உள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 8.17 சதவீத மாக இருந்தது. உணவு பண வீக்கத்தில் பருப்பு வகைகள் 44.91 சதவீதமாகவும், காய்கறிகள் 12.52 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு விலை 17.08 சதவீதம் விலை சரிந்துள்ளது.
ஆண்டு பணவீக்க குறியீட்டில் எரிபொருள் மற்றும் உற்பத் தித்துறை பொருட்களும் சரிந் துள்ளன. மொத்த விலை குறியீடு புள்ளிவிவரங்கள் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச் சகத்தால் வெளியிடப்படுகிறது