

டீம்லீஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடுக்கு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை முதலீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஐபிஓ மூலம் 423 கோடி ரூபாய் திரட்ட இந்த நிறுவனம் முடிவெடுத்திருந்தது. ஆனால் 27,918 கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து சென்செக்ஸ் 1822 புள்ளிகள் சரிந்திருந்த நிலையில் 66 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.
சிறுமுதலீட்டாளர்களுக்கு ஒதுக் கப்பட்ட பங்குகளுக்கு 10.5 மடங் குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
முதல் இரண்டு நாட்களில் இந்த ஐபிஓக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையில் 89 சதவீத அளவுக்கு மட்டும் விண்ணப்பங்கள் வந்திருந்தன. ஆனால் கடைசி நாளில் அதிக அளவுக்கு விண்ணப் பங்கள் வந்திருந்தன.
கடந்த வருடம் வெளியான ஐபிஓக்களில் பல நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.