பிளிப்கார்ட் தளத்தில் 2 நொடிகளில் 70,000 லீஇகோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை

பிளிப்கார்ட் தளத்தில் 2 நொடிகளில் 70,000 லீஇகோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை
Updated on
1 min read

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான லீஇகோ, பிளிப்கார்ட் இணையதளத்தில் தங்களுடைய 4ஜி லீ 1எஸ் ஸ்மார்ட்போன் விற்க திட்டமிட்டிருந்தது. அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு நொடிகளில் 70,000 ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்கப்பட்டன. பிப்ரவரி 2-ம் தேதி விற்பனை தொடங்கியது.

விற்பனை செய்ய மொத்தம் 70,000 ஸ்மார்ட்போன்கள் மட்டுமே வைத்திருந்தோம் ஆனால் இரண்டு நொடிகளில் மொத்தமும் விற்றுவிட்டதாக லீஇகோ சிஸ்டம் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அதுல் ஜெயின் தெரிவித்தார்.

இந்த ஸ்மார்ட்போனை வாங்கு வதற்கு பிளிப்கார்ட் இணையதளத் தில் 6.05 லட்சம் நபர்கள் பதிவு செய்திருந்தனர். பிளிப்கார்ட் இணைய தளத்தில் எந்த பொருளுக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததில்லை. இந்த தகவலை பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை தொழில் அதிகாரி அங்கித் நகோரி தெரிவித்தார். இருந்தாலும் அத்தனை முன்பதிவுகளும் விற்பனையாக இதுவரை மாறியதில்லை என்பதால் குறைவான ஸ்மார்ட்போன்களை மட்டுமே வைத்திருந்தோம் என்றார்.

தவிர பிப்ரவரி 9-ம் தேதி மீண்டும் ஒரு முறை இந்த ஸ்மார்ட்போனை விற்க திட்டமிட்டிருக்கிறோம். முன்பு வாங்க முடியாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பினை பார்க்கும் போது இந்த வருட இறுதிக்குள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவோம் என்று அதுல் ஜெயின் கூறினார்.

இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் எங்களுக்கு லாபம் இல்லை. நிறுவனத்தின் இதர பிரிவுகளின் மூலமே லாபம் கிடைக்கும். நாங்கள் கொடுக்கும் அத்தனை வசதி உள்ள மொபைல் போன்களின் சந்தை விலை 16,042 ரூபாய். ஆனால் நாங்கள் 10,999 ரூபாய்க்கு கொடுக்கிறோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in