

உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 22.5 சதவீத சந்தையை இந்த நிறுவனம் வைத்துள்ளது. இதற்கடுத்து ஆப்பிள் நிறுவனம் 15.9 சதவீத சந்தையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2015-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை உலக அளவில் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐந்து போன்களில் ஒரு போன் என்கிற விகிதத்தில் சாம்சங் விற்பனை இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஹூவய் ஸ்மார்ட்போன்கள் 7.3 சதவீத சந்தையை வைத்துள்ளது. லெனோவா, மோட்டோரோலோ நிறுவனங்கள் 5.1 சதவீத சந்தையும், ஜியோமி 4.6 சதவீத சந்தையையும் வைத்துள்ளன.