

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆந்திரா வங்கி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏபி ஆரோக்யதான் என்ற பெயரிலான இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முழு குடும்பத்துக்கும் அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை காப்பீடு செய்ய முடியும்.
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் 3 மாத குழந்தை முதல் 65 வயதானவர்களுக்குக் கூட காப்பீடு கிடைக்கும். காப்பீட்டுக்கு மருத்துவ பரிசோதனை அவசியமில்லை. பணமில்லாத மருத்துவ வசதியை 24 மணி நேரமும் அளிக்கக் கூடிய நிறுவனமாக(டி.பி.ஏ) மெசர்ஸ் குட் ஹெல்த் பிளான் லிமிடெட் செயல்படும். இந்த காப்பீட்டுத் திட்டத்துக்கு 80 டி பிரிவில் அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு பெறமுடியும்.