கோத்ரெஜ் நிறுவனத்தின் புதிய ஏசி அறிமுகம்

கோத்ரெஜ் நிறுவனத்தின் புதிய ஏசி அறிமுகம்
Updated on
1 min read

மின்பொருள் தயாரிப்பில் ஈடுபட் டுள்ள கோத்ரெஜ் நிறுவனம் மின்சாரத்தை சேமிக்கும் அதே சமயம் ஓசோனை பாதிக்காத சிஎப்சி வாயுவை வெளியிடாத புதிய ரக ஏசி-யை அறிமுகப் படுத்தியுள்ளது. இதற்கான அறி முக விழாவில் இதுகுறித்து நிறுவ னத்தின் தமிழக, கேரள பிராந்திய மண்டல தலைவர் ஜூனைத் பாபு கூறியது:

வேறெந்த தயாரிப்புகளிலும் இல்லாத அளவுக்கு 35-க்கும் அதிகமான பிராண்டுகள் இங்குள் ளன. கோத்ரெஜ் நிறுவனம் தொடர்ந்து சூழல் பாதுகாப்பு தயாரிப்புகளை அளித்து இப்பிரிவில் முதலாவதாகத் திகழ்கிறது. அந்த வரிசையில் என்எக்ஸ்டபிள்யூ என்ற புதிய ரக ஏசிக்கள் இதுவரை வெளிவந்துள்ள, சந்தையில் உள்ள தயாரிப்புகளை விட மேம்பட்டது.

மின் சேமிப்பை அடையாளம் காட்டும் 5 நட்சத்திர குறியீடு உடைய ஏசி-க்களைக் காட்டிலும் இது 31 சதவீத அளவுக்கு சேமிக் கும். ஒரு டன் மற்றும் ஒன்றரை டன் அளவுகளில் இது கிடைக்கும்.

ரூ.45 ஆயிரம் மற்றும் ரூ.55 ஆயிரம் விலையிலான இந்த ஏசி-க்களின் கம்ப்ரஸருக்கு 10 ஆண்டும், கன்டென்ஸருக்கு 5 ஆண்டு வாரண்டியும் அளிக்கப்படும். மற்ற ஏசிக்களை விட இது சற்று விலை அதிகம். ஆனால் இதன் மூலம் மிச்சமாகும் மின்சார கட்டணத்தின் மூலம் ஏசிக்கு அளித்த கூடுதல் தொகையை மூன்றாண்டுகளில் சேமித்துவிட முடியும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in