அரசு தங்க பத்திரத் திட்டம்; கடைசி தேதி; வெளியீட்டு விலை என்ன?

அரசு தங்க பத்திரத் திட்டம்; கடைசி தேதி; வெளியீட்டு விலை என்ன?
Updated on
1 min read

அரசு தங்க பத்திரத் திட்டம் 4 வது வரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில் வெளியீட்டு விலையும், கடைசி தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் தங்க கடன் பத்திரங்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மே 12 தேதியிட்ட இந்திய அரசின் அறிவிப்பு எண் 4(5)-B(டபுள்யூ & எம்)/2021-ன் படி, 2021 ஜூலை 20-ஐ செட்டில்மெண்ட் தேதியாக கொண்ட அரசு தங்க பத்திரங்கள் 2021-22 (வரிசை IV) 2021 ஜூலை 12 முதல் 16 வரை திறந்திருக்கும்.

சந்தா காலத்திற்கான பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ 4,807 (ரூபாய் நான்கு ஆயிரத்து எண்ணூற்று ஏழு மட்டுமே) ஆக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் 2021 ஜூலை 9 தேதியிட்ட செய்தி குறிப்பிலும் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியுடனான ஆலோசனைக்குப் பிறகு, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூபாய் 50 (ரூபாய் ஐம்பது மட்டுமே) தள்ளுபடி வழங்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் வெளியீட்டு விலை, ஒரு கிராமுக்கு ரூ 4,757 (ரூபாய் நான்கு ஆயிரத்து எழுநூற்றி ஐம்பத்தி ஏழு மட்டுமே) ஆக இருக்கும்.

இவ்வாறு மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in