சிட்டி யூனியன் வங்கி லாபம் 10% உயர்வு

சிட்டி யூனியன் வங்கி லாபம் 10% உயர்வு
Updated on
2 min read

தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 10 சதவீதம் உயர்ந்து 113 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 102.70 கோடி ரூபாயாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து 332 கோடி ரூபாயாக இருக்கிறாது.

இந்த காலாண்டில் மொத்த வருமானம் 850 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 782 கோடி ரூபாயாக மொத்த வருமானம் இருந்தது.

வங்கியின் நிகர வட்டி வரம்பு டிசம்பர் காலாண்டில் 3.82 சதவீதமாக இருக்கிறது. வங்கியின் மொத்த வணிகம் 13 சதவீதம் உயர்ந்து 45,334 கோடி ரூபாயாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 2.37 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.49 சதவீதமாகவும் இருக்கிறது.

================================

எஸ்பிஐ நிகர லாபம் 62% சரிவு

வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை அதிகரித்ததால் எஸ்பிஐ வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 62 சதவீதம் சரிந்து ரூ.1,115 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,910 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது.

வங்கியின் மொத்த வருமானம் 46,731 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருட டிசம்பர் காலாண்டில் 43,784 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 5.10 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.89 சதவீதமாகவும் இருக்கிறது. வாராக்கடனுக்காக ரூ.8,483 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6,477 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நிகர வட்டி வரம்பு 3.12 சதவீதத்தில் இருந்து 2.93 சதவீதமாக சரிந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 3 சதவீதம் அளவுக்கு சரிந்து 154 ரூபாயில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 52 வார குறைந்தபட்ச விலையான 152.20 ரூபாயைத் தொட்டது.

================================

இந்தியன் வங்கி லாபம் ரூ. 42 கோடி

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி டிசம்பருடன் முடி வடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ. 42.30 கோடியை லாபமாக ஈட்டி யுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 277.52 கோடியாக இருந்தது. கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்த தால் லாபம் குறைந்ததாக வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மகேஷ் குமார் ஜெயின் கூறினார். மூன்றாம் காலாண்டில் லாபம் 85 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் 9 மாதங்களில் வங்கியின் நிகர லாபம் ரூ. 626.89 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.799 கோடியாக இருந்தது. 3ஆம் காலாண்டில் வங்கியின் நிகர வருமானம் ரூ. 4,438 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 4,321 கோடியாக இருந்தது.

கடனுக்கான ஒதுக்கீடு ரூ. 400 கோடியாகும். இதனால் லாபம் குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in