

ஏர் ஏசியா நிறுவனத்தின் தமைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் மித்து சாண்டில்யா ராஜிநாமா செய்தி ருப்பதாக பல தகவல்கள் உறுதி படுத்துகின்றன. அவரது பதவி ஒப்பந்தம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை இருந்தாலும், நீட்டிக்க சாண்டில்யா விரும்பவில்லை எனவும் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜிநாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
தலைமைச் செயல் அதிகாரி யாக மட்டும் இருந்த சாண்டில்யா கடந்த வருடம் நிர்வாக இயக்கு நராகவும் பதவி உயர்த்தப்பட்டார். கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனம் தொடங் கப்பட்டது. அப்போதில் இருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.
ஆனால் மலேசியாவில் செயல்பட்டு வரும் தங்கள் தாய் நிறுவனமான ஏர் ஏசியா ஒவ்வொரு விஷயத்தில் எடுக்கும் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்தாக கூறப்படுகிறது.
இது குறித்து ஏர் ஏசியா செய்தி தொடர்பாளர் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்திய விமான போக்குவரத்து சந்தையில் இந்த நிறுவனத்துக்கு 2 சதவீத சந்தை இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ரூ. 65 கோடி அளவுக்கு இந்நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.