சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறையலாம்

சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறையலாம்
Updated on
1 min read

சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்படலாம் என்று பொருளாதார விவகாரங்களுக் கான செயலர் சக்திகாந்ததாஸ் தெரிவித்தார். வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டு விட்டது. இதற்கான முறையான அறிவிப்புகள் இன் னும் சில நாட்களில் வெளியிடப் படும். வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்கும் என்று தாஸ் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது.

ஐந்து வருடங்களுக்கு குறை வான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். அதே சமயத்தில் நீண்ட கால சேமிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமான அந்த திட்டங்களில் மாற்றம் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. அதேபோல மூத்த குடிமக்கள் திட்டம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான திட்டத் தின் வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதேபோல தற்போது ஆண் டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது. இனி காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அரசாங்க பத்திரங்களுக்கு இணையாக சிறு சேமிப்புத் திட் டங்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும் என்றார்.

ரிசர்வ் வங்கி 1.25 சதவீதம் வட்டி குறைப்பு செய்தது. ஆனால் பெரிய அளவில் வட்டி குறைப்பு செய்யவில்லை. மத்திய அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் போது வங்கிகளில் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டியை குறைக்க முடியவில்லை என்று வங்கிகள் குறை கூறிவந்தன. இப்போது சிறிய சேமிப்பு திட்டங் களுக்கு வட்டியை குறைக்கும் போது வங்கிகளும் தங்களுடைய டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை குறைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

செப்டம்பர் 29-ம் தேதி ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்த போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைப்பது குறித்து கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in