Last Updated : 08 Feb, 2016 09:18 AM

 

Published : 08 Feb 2016 09:18 AM
Last Updated : 08 Feb 2016 09:18 AM

பாரதீப்பில் ரூ. 34,555 கோடி மதிப்பில் புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஒடிஷா மாநிலம் பாரதீப்பில் ரூ.34,555 கோடி மதிப்பில் அமைக் கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு (ஐஓசி) சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:

2022-ம் ஆண்டிற்குள் எண்ணெய் இறக்குமதி குறைந்தது 10 சதவீதமாவது குறைக்கப்படும். தொடர்ந்து இதே நோக்கத்தோடு வேலை செய்யுமாறு நான் அதிகாரி களை கேட்டுக் கொள்கிறேன். இந்த சுத்திகரிப்பு ஆலையால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு கள் உருவாகும் அதுமட்டுமல்லா மல் கோடிக்கணக்கில் உள்ள ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்க வழிவகுக்கும்.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

ஆண்டுக்கு 1.5 கோடி டன் சுத்திகரிப்பு திறனுடன் இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2000-ம் ஆண்டு மே மாதம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஒன்பதாவது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமான பணிகள் 16 வருடங்களாக நடந்தன. பாரதீப் ஆலைக்கு முன்னதாக 8 சுத்திகரிப்பு ஆலைகள் இருந்தன. இந்த 8 ஆலைகளின் கச்சா எண்ணெய் கொள்திறன் 5.42 கோடி டன்.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு ஆலைகளில் கச்சா எண்ணெய் கொள்திறன் 6.2 கோடி டன். பாரதீப் ஐஓசி சுத்திகரிப்பு ஆலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை முந்துவதற்கு உதவும். தற்போது ஐஓசி நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக உருவாகியுள்ளது. மேலும் ஐஓசியின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொத்த கொள்திறன் 1.150 கோடி டன்.

பாரதீப் சுத்திகரிப்பு ஆலை உலகிலேயே மிக சிறந்த நவீன சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாக இருக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 56 லட்சம் டன் டீசலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 37 லட்சம் பெட்ரோல் மற்றும் 19 லட்சம் மண்ணெண்ணயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 7 லட்சத்து 90,000 டன் எல்பிஜி மற்றும் 12 லட்சம் டன் பெட்ரோலிய கரிகளையும் உற்பத்தி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுத்திகரிப்பு ஆலை 2.8 லட்சம் டன் ஸ்டீல் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இது 30 ஈபிள் டவர் அல்லது 350 ராஜாதானி ரயிலுக்கு சமமாக இருக்கும். 2,400 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது பாரதீப் சுத்திகரிப்பு ஆலை பாரத் ஸ்டேஜ் 4 கட்டுப்பாட்டு விதிகளின்படி பெட்ரோல் மற்றும் டீசல்களை உற்பத்தி செய்யும். பின்னர் வாகன எரிபொருள் கொள்கைக்கு இணங்க பாரத் ஸ்டேஜ் 6 விதிகளுக்கு மாற்றிக் கொள்ளும். யூரோ 5 விதிகளின்படி பெட்ரோல் மற்றும் டீசல்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்த சுத்திகரிப்பு ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் அம்சம். இதன் மூலம் பசுமை வாகன எரிபொருள்களை வளர்ந்த நாடுகளுக்கு அனுப்ப முடியும்.

ரூ. 3,150 கோடி மதிப்பீட்டில் பாலிபுரோப்பிலின் ஆலையும் அமைக்கப்பட்டு வருகிறது. 2017-18 ம் ஆண்டில் இது முழுவது மாக அமைக்கப்பட்டுவிடும். மேலும் ரூ. 3,800 கோடி மதிப்பீட்டில் எத்திலின் மீட்பு யூனிட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x