இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated on
2 min read

இந்தியாவில் புதிய கோடீஸ் வரர்கள் அதிகரித்துள்ளதாக ஹூருன் நிறுவனத்தின் குளோபல் ரிச் 2016 என்கிற ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அதிக சொத்து கொண்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள் ளார். இவரது சொத்து மதிப்பு 2,600 கோடி டாலர்கள். மேலும் இந்தியாவில் புதிதாக 27 கோடீஸ் வரர்களும், உலக அளவில் 99 புதிய கோடீஸ்வரர்களும் உருவாகியுள்ளனர்.

இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 30,800 கோடி டாலர்களாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவீதம் மொத்த சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 21 வது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து சன்பார்மா நிறுவனத்தின் தலைவர் திலீப் சாங்வி 1,800 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்தியாவில் தற்போது 111 நபர்களிடம் நூறு கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் அந்த பட்டியல் கூறுகிறது.

இது குறித்து பேசிய ஹூருன் அறிக்கையின் முதன்மை ஆராய்ச்சி யாளரும், நிர்வாக இயக்குநருமான அனாஸ் ரஹ்மான் ஜூனைத் ``மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள ``மேக் இன் இந்தியா’’ திட்டத்தின் மூலம் இந்தியாவில் சொத்து உருவாக்கும் ஆற்றல் அதிகரிக்கும்’’ என்று கூறினார்.

இந்தியாவினுடைய 2016-ம் ஆண்டுக்கான பட்ஜெட், வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும், நிர்வாக நடைமுறைகளில் உள்ள இறுக்கத்தை குறைத்து வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இகாமர்ஸ் நிறுவன மான பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சாலும் இடம் பெற்றுள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு 140 கோடி டாலர்களாகும். இவர்கள் 40 வயதுக்குட்பட்ட பணக்காரர்கள் வரிசையில் 69 வது இடத்தில் உள்ளனர். சர்வதேச அளவில் 2016 ல் 99 புதிய கோடீஸ்வர்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

அதிக சொத்து கொண்டவர்கள் பட்டியலில் சீனா முந்தியுள்ளது. பணக்காரர்களின் தலைநகரமாக முதல்முறையாக பெய்ஜிங் உருவாகியுள்ளது. சீனாவில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டி ருப்பவர்களில் 117 நபர்கள் நூறு கோடிக்கும் அதிகமான சொத்து கொண்டவர்களாக உள்ளனர். உற்பத்தி துறையிலிருந்து 94 நபர் களும், தொழில்நுட்ப துறையி லிருந்து 68 நபர்களும் 100 கோடிக் கும் அதிகமாக சொத்து கொண் டுள்ளனர்.

சீனாவில் சொத்து உருவாக்கத் தில் பெய்ஜிங் நகரம் முதலிடத் தில் உள்ளது. மேலும் ஹாங்காங், ஷாங்காய் சென்ஸென், ஹங் ஹோஸூ போன்ற நகரங்களிலிருந் தும் அதிக சொத்து கொண்டவர்கள் உருவாகியுள்ளனர். சீன பணக் காரர்களின் சராசரி வயது 56 என்றும் அந்த பட்டியல் கூறுகிறது. உலக அளவில் சுயமாக சம்பாதித்த, அதிக சொத்து கொண்டவர்கள், சீனாவில் அதிகரித்துள்ளனர். சீனப் பணக்காரர்களின் மொத்த சொத்து 9 சதவீதம் அதிகரித்து 7.3 லட்சம் கோடி டாலர்களாக உள்ளது. இது ஜெர்மனி, இங்கிலாந்து ஜிடியை விட அதிகம். அமெரிக்க ஜிடிபி மதிப்பில் சுமார் 50 சதவீதம் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in