Published : 07 Jul 2021 12:04 PM
Last Updated : 07 Jul 2021 12:04 PM

பெட்ரோல் விலை: சென்னையில் ரூ. 101.06; டெல்லியில் ரூ. 100.21

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.06 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அண்மையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. சென்னையிலும் சில நாட்களுக்கு முன்பே பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 100-ஐ கடந்தது.

இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 31 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 100. 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டீசல் நேற்று லிட்டருக்கு 19 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 93. 91 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோல், லிட்டர் 100.75 ரூபாய், டீசல் லிட்டர் 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 101.06 ரூபாய்க்கும் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டெல்லியில் பெட்ரோல், லிட்டர் 100.21 ரூபாய், டீசல் லிட்டர் 89.53 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் பெட்ரோல், லிட்டர் 106.25ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 96.97 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தாவில் பெட்ரோல், லிட்டர் 100.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x