

வங்கி, காப்பீடு மற்றும் இதர நிதி சேவை திட்டங்களை வழங்கி வரும் சச்சின் பன்சாலின் நவி குழுமத்தின் ஒரு அங்கமாகிய நவி மியூச்சுவல் ஃபண்ட் தற்போது புதிய முதலீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலீட்டாளரின் தேவை, விருப்பம் போல, நினைத்த நேரத்தில் முதலீடு செய்யும் வசதி கொண்ட இத்திட்டம் ``நவி நிஃப்டி 50 ( Navi Nifty 50)’’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் திரட்டப்படும் தொகை, தேசிய பங்குச் சந்தையின் முன்னணி 50 பங்குகளில் முதலீடு செய்யப்படும். அவ்வகையில், இந்த திட்டம் இன்டெக்ஸ் ஃபண்ட் என்ற பொதுப் பெயரில் வழங்கப்படும ஒரு முதலீட்டு வாய்ப்பாகக் குறிப்பிடப்படுகிறது.
தற்போது சந்தையில் உள்ள பல்வேறு இன்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டு திட்டங்களில் மிகக் குறைந்த கட்டணம் பெறும் திட்டம் இதுவே. இந்த திட்டத்தில் இம்மாதம் 12ஆம் தேதி வரை முதலீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.
முதலீட்டாளர்கள் GROWW, PaytmMoney, ZERODHA COIN, INDMONEY போன்ற இணையதளங்கள் வழியாகவோ, அல்லது அவர்களின் விநியோகஸ்தர்கள் மூலமாகவோ முதலீடு செய்யலாம்.
தேசிய பங்குச் சந்தையின் முதல் முன்னணி 50 பங்குகளில் இந்தத் தொகை முதலீடு செய்யப்படும் என்பதால், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டின் போக்கை பிரதிபலிப்பதாக, அதை ஒட்டியே அமையும்.
தற்போது சந்தையில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் இன்டெக்ஸ் அடிப்படை முதலீட்டு திட்டங்களின் சராசரிக் கட்டணம் பொதுவாக, மொத்த முதலீட்டு மதிப்பில் 0.25 சதவீதம் என்ற அளவில் உள்ளது. குறிப்பிட்டுப் பார்க்கும்போது, பெரும்பாலான இன்டெக்ஸ் ஃபண்ட் திட்டங்களின் தற்போதைய கட்டண அளவு 0.15 முதல் 0.20 சதவீதம் வரை வேறுபடுகிறது. ஆனால், நவி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் மிகக் குறைந்த நிர்வாகக் கட்டணமாக, மொத்த மதிப்பில் 0.06 சதவீதத்தை இத்திட்டத்திற்கான நிர்வாகக் கட்டணமாகப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. நீண்டகால அடிப்படையில் முதலீட்டின் வளர்ச்சியைப் பெற விரும்புவோருக்கும், நிஃப்டி பங்குகளில் முதலீடு செய்து பலன்பெற நினைக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற முதலீட்டு திட்டமாகும்.