வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி
Updated on
1 min read

பலத்த நெருக்கடியும், மிகுந்த எதிர்பார்ப்பும் நீடித்து வந்த நிலையில் வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதங்களான ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போவில் பழைய நிலையே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கடன் கொள்கை ஆய்வுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் டெபாசிட் செய்யும் பணத்துக்கான வட்டி (எஸ்.எல்.ஆர்) மட்டும் 0.5% குறைக்கப்பட்டு 22.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாததால், வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதத்திலும் எவ்வித மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in