பந்தன் வங்கியில் ரூ.7,000 கோடி டெபாசிட்

பந்தன் வங்கியில் ரூ.7,000 கோடி டெபாசிட்
Updated on
1 min read

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பந்தன் வங்கியில் 7,000 கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் வந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வங்கியை தொடங்கினோம். இப்போது வரை 7,000 கோடி ரூபாய் டெபாசிட்கள் வந்துள்ளது. இது நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகர் கோஷ் தெரிவித்தார்.

இதுவரை 612 வங்கி கிளைகள் உள்ளன. 7.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதையே டெபாசிட் தொகை உயர்ந்திருப்பதற்கு காரணம். அடுத்த நிதி ஆண்டில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய்க்கு கீழான கடன் வழங்குவதை குறித்து பரிசீலனை செய்வோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கோஷ் தெரிவித்தார்.

------------------------------------

பொதுத்துறை வங்கிகளில் ரூ.5,000 கோடி அரசு முதலீடு

நடப்பு காலாண்டில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே உறுதி அளித்தபடி இந்த முதலீடு இருக்கும் என்று நிதிச் சேவைகள் பிரிவு செயலாளர் அஜுலி சிப் துஹால் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு பிறகு இந்த முதலீடு இருக்கும் என்றார்.

பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்தும் இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் இந்த முதலீடு இருக்கும். இந்த திட்டத்தின்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.70,000 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. அதன் படி நடப்பு நிதி ஆண்டில் 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.

அதன்படி ஏற்கெனவே 13 பொதுத்துறை வங்கிகளில் 20,088 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகை நடப்பு நிதி ஆண்டுக்குள் முதலீடு செய்யப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in