Published : 23 Feb 2016 10:36 AM
Last Updated : 23 Feb 2016 10:36 AM

இவரைத் தெரியுமா? - சஞ்ஜீவ் கபூர்

$ டாடா - எஸ்ஐஏ கூட்டு விமான நிறுவனமான விஸ்தாரா விமான சேவை நிறுவனத்தின் தலைமை உத்திகள் மற்றும் வர்த்தக அதிகாரி. நவம்பர் 2014 லிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ ஆசியா, ஐரோப்பா அமெரிக்க நாடுகளில் விமான சேவைத்துறையில் ஆலோசனை மற்றும் தலைமைப் பொறுப்புகளில் 19 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

$ இதற்கு முன்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார்.

$ வங்கதேசத்தைச் சேர்ந்த ஜிஎம்ஜி விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ பெய்ன் அண்ட் கம்பெனியில் விமான பயிற்சிப் பிரிவின் தலைமைப் பொறுப்பு, நார்த்வெஸ்ட் விமான நிறுவனத்தில் முதன்மை மேலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ ஆரக்கிள் நிறுவனத்தின் முதன்மை புராடக்ட் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

$ அமெரிக்காவின் டார்ட்மவுத் கல்லூரில் இளநிலை பட்டமும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளியில் மேலாண்மை உயர்கல்வியும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x