

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நேற்று புதிய வகையான சிடி100பி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் டெல்லி விற்பனையக விலை ரூ. 30,990.
புதிய வகையான சிடி100பி மோட்டார் சைக்கிள் சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 99.1 கிலோ மீட்டர் வரை ஓடியதாக பஜாஜ் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இரண்டு வருட உத்திரவாதம் அளிப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ``வாடிக்கையாளர்கள் பழைய பைக்கை தேடுவதை விட ஒரு புதிய பைக் வைத்திருக்கும் அனுபவத்தை சிடி100பி மூலம் பெற முடியும்’’ என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் தொழில் பிரிவின் தலைவர் எரிக் வாஸ் தெரிவித்துள்ளார். சிடி100 பைக்கில் உள்ள இன்ஜினை மேம்படுத்தி இந்த சிடி100பி பைக்கில் பொருத்தியுள்ளனர். மிகப் பெரிய வட்ட வடிவ முகப்பு விளக்கும், இருக்கை வசதியாக இருக்குமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.