Published : 01 Dec 2015 10:04 AM
Last Updated : 01 Dec 2015 10:04 AM

இவரைத் தெரியுமா?- அர்னே எம் சோரென்சன்

சர்வதேச ஹோட்டல் நிறுவனமான மரியாட் இண்டர்நேஷனலின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

1996 இல் இந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். இதற்கு முன்பு தலைமைச் செயல்பாட்டு அதிகாரி, செயல் துணைத் தலைவர், தலைமை நிதி அதிகாரி, ஐரோப்பிய செயல்பாடுகளுக்கான தலைவர் என பல பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர்.

அமேசான் மழைக்காடுகளில் பாதுகாப்பு பணி சேவைகளை மேற்கொண்டிருக்கும் மரியாட் குளோபல் சேவை நிறுவன இணை நிறுவனர்.

மரியாட் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு வாஷிங்டனில் செயல்பட்டு வரும் லாதம் அண்ட் வாட்கின்ஸ் சட்ட நிறுவனத்தில் பணியாற்றியவர்.

நிறுவனங்களை இணைப்பது மற்றும் கையகப்படுத்துவதில் வல்லுநர்.

அமெரிக்காவில் உள்ள லூதர் கல்லூரி மற்றும் மின்னசோட்டா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் சட்டப் படிப்பு முடித்தவர்.

அமெரிக்காவின் சுற்றுலா மேம்பாட்டுக் குழு, லூதர் கல்லூரி குழு, அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுமதி குழு என பல்வேறு குழுக்களிலும் செயல்பட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x