புதிய விமானங்களை வாங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டம்

புதிய விமானங்களை வாங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டம்
Updated on
1 min read

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் புதிய விமானங்களை வாங்க ஆர்டர்களை கொடுக்க உள்ளது. இந்த விமானங்கள் நடப்பாண்டுக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் நேற்று கூறினார். இது நிறுவனத்தின் அடுத்த கட்ட முன்னேற்றம் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது.

பதிவு விமானங்களை வாங்க ஆர்டர் செய்ய இது சரியான நேரம் என்று கூறிய சிங், இந்த விமானங்கள் நிறுவனத்தில் 10-15 ஆண்டுகள் வரை இருக்கும். இதற்கான நடைமுறை நடப்பு நிதி ஆண்டுக்குள் செயல்படுத் தப்படும்., புதிய விமானங்கள் வாங்குவதற்கு ஏற்ப விரும்பும் நிறுவனங்களிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் குறிப் பிட்டார். இது ஓரிரு மாதங்களில் முடிவடையும் என்றார்.

தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வசம் 41 விமானங்கள் உள்ளன. 25 போயிங் விமானங்கள், 14 பாம்பார்டியர் க்யூ400எஸ் ரக விமானங்களும், 2 ஒப்பந்த ஏர்பஸ் 320 விமானங்களும் உள்ளன. நிறுவனம் 150 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே விமான சேவையை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு மூலதனம் திரட்டும் வழியை ஆராய்ந்து வருகிறோம் என்று குறிப்பிட்டவர், பங்கு மூலம் மூலதனம் திரட்டும் வழியை யோசிக்கவில்லை என்றும், வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக லாபகரமான பாதையில் உள்ளது. கடந்த மாதத்தில் 23.77 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த செப்டம்பருடன் முடிந்த மூன்று மாதத்தில் எரிபொருள் செலவு மற்றும் இதர செலவு கள் குறைந்துள்ளன.

அஜய்சிங் இந்த நிறுவ னத்தின் தொடக்க நிறுவனராக இருந்தவர். மீண்டும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இவரது கைவசம் வந்ததும் லாப பாதைக்கு திரும்பியுள்ளது. நிறுவனத் தின் வருமானத்தை அதிகரிப் பதற்கு தொடர்ந்து கவனம் செலுத் துவோம் என்று அஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு சலுகை

இதற்கிடையே நிறுவனம் ரூ.716 கட்டணத்தில் ஒரு வழி விமான பயண சலுகையை புத்தாண்டை முன்னிட்டு அறிவித் துள்ளது. இந்தக் கட்டணத் தொகையுடன் வரித் தொகை யை செலுத்த வேண்டும். இச்சலுகையில் 2016 ஐனவரி 15 முதல் 2016 ஏப்ரல் 12ம் தேதி வரை பயணம் செய்யலாம். முன்பதிவு டிசம்பர் 31 நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in