

நடப்பு நிதி ஆண்டுக்கான வருங் கால வைப்பு நிதி(பிஎப்) வட்டி விகி தம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நிதி ஆண்டுகளாக பிஎப் மீதான வட்டி விகிதம் 8.75 சதவீதம் என்ற நிலையிலேயே உள்ளது.
பிஎப் அறங்காவலர் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இந்த சந்திப்பில் பிஎப் மீதான வட்டியை நிர்ணயம் செய்வது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றாலும், பிஎப் அறங்காவலர் குழு வட்டி விகித்தை வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே நிதி அமைச்சகம் பிஎப் மீதான வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஎப் அமைப்பு கடந்த நான்கு மாதங்களில் இடிஎப் மூலமாக 3,174 கோடி ரூபாயை முதலீடு செய் திருக்கிறது. ஆகஸ்ட் முதல் நவம்பர் 30 வரை இந்த தொகை முதலீடு செய்யப்பட்டதாக நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதில் அளித்திருக்கிறார்.