Published : 20 Jun 2021 04:50 PM
Last Updated : 20 Jun 2021 04:50 PM

தங்கம் விலை ; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4430- க்கு விற்பனையாகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4430- க்கு விற்பனையாகிறது. பவுன் ரூ.35440-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38312-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.73.10 -க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,100 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x