சூரிய மின் உற்பத்தி திறன் 5 ஜிகாவாட்டை கடந்தது

சூரிய மின் உற்பத்தி திறன் 5 ஜிகாவாட்டை கடந்தது
Updated on
1 min read

இந்தியாவின் ஒட்டுமொத்த சூரிய மின் உற்பத்தி திறன் 5 ஜிகாவாட்டை கடந்ததாக பிரிட்ஜ் டூ இந்தியா என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சூரியசக்தி திறனை மொத்தம் 4.7 ஜிகாவாட் அளவிற்கு இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது.

வீடுகள் மற்றும் அலுவல கங்களின் மேல் பகுதியில் சோலார் பலகைகளை நிறுவி சூரிய மின் உற்பத்தி செய்வதில் 525 மெகா வாட் அளவிற்கு சூரிய சக்தியை பயன்படுத்திக் கொள்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கிற்கு மேலாக சூரியசக்தி துறை இந்த ஆண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 15 ஜிகாவாட் மதிப்புள்ள திட்டங்கள் ஏலத்திலும் வளர்ச்சி நிலையிலும் இருக்கின்றன என்று பிரிட்ஜ் டூ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினய் ரஸ்டாகி கூறியுள்ளார்.

மேலும் விலை குறைவு மற்றும் பசுமை எரிசக்தியின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றினால்தான் பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங் களில் உறுதியான கொள்கைகளை அறிவித்துள்ளார்கள் என கூறினார்.

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் ஆகியவை முன்னணியில் இருக்கின்றன. 4 தென் இந்திய மாநிலங்கள் இன்னும் 2 வருடத்தில் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டங்கள் அதிகரிப்பு

இன்றைய நிலவரப்படி 15.7 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் வர இருக்கிறது. 2016-17 நிதியாண்டு சூரிய மின் உற்பத்தி துறைக்கு மாற்றம் ஏற்படும் ஆண்டாக இருக்கும். வருடாந்திர திறனில் 6 ஜிகா வாட் அதிகரித்து சர்வதேச அளவில் சூரிய மின் உற்பத்தி துறையில் இந்தியா முன்னணி நாடாக இருக்கும் என தெரி வித்துள்ளது.

வீடுகள் மற்றும் அலுவல கங்களின் மேல் பகுதியில் சோலார் பலகைகளை பொருத்தி சூரிய மின் உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் முன்ன ணியில் உள்ளன.

மேலும் இந்த உற்பத்தி துறை குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில வருடங்களில் 50 சதவீத வளர்ச்சி இருக்கும் என பிரிட்ஜ் டூ இந்தியா தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in