Published : 17 Jun 2021 10:11 AM
Last Updated : 17 Jun 2021 10:11 AM

சமையல் எண்ணெய்  விலை குறையத் தொடங்கியது:நுகர்வோர் நலத்துறை புள்ளி விவரம்

புதுடெல்லி 

நுகர்வோருக்கு நிம்மதி அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய்களின் விலை குறையத் தொடங்கி உள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

சர்வதேச விலைகள், உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு சிக்கலான விஷயங்களை சமையல் எண்ணெய் விலைகள் சார்ந்துள்ளன.

உள்நாட்டு நுகர்வு மற்றும் உற்பத்திக்கு இடையேயான இடைவெளி அதிகமாக இருந்த காரணத்தால், குறிப்பிட்ட அளவு சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யவேண்டி இருந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

இதன் மூலம் சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நுகர்வோருக்கு நிம்மதி அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய்களின் விலை குறையத் தொடங்கி உள்ளன
பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலைகள் இந்தியாவில் குறையத் தொடங்கி உள்ளன. நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தரவுகளின் படி, கடந்த ஒரு மாத காலமாக சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்து வருகின்றன.

மும்பை மாநகரத்தில் எண்ணெய் விலை சுமார் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவருகிறது.

2021 மே 7 அன்று ஒரு கிலோ ரூ 142 ஆக இருந்த பாமாயிலின் விலை தற்போது ரூ 115 ஆக 19 சதவீதம் குறைந்துள்ளது.

2021 மே 5 அன்று ஒரு கிலோ ரூ 188 ஆக இருந்த சூரியகாந்தி எண்ணெயின் விலை தற்போது ரூ 157 ஆக 16 சதவீதம் குறைந்துள்ளது.

2021 மே 20 அன்று ஒரு கிலோ ரூ 162 ஆக இருந்த சோயா எண்ணெயின் விலை தற்போது ரூ 138 ஆக 15 சதவீதம் குறைந்துள்ளது.

2021 மே 16 அன்று ஒரு கிலோ ரூ 175 ஆக இருந்த கடுகு எண்ணெயின் விலை தற்போது ரூ 157 ஆக சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது.

2021 மே 14 அன்று ஒரு கிலோ ரூ 190 ஆக இருந்த கடலை எண்ணெயின் விலை தற்போது ரூ 174 ஆக 8 சதவீதம் குறைந்துள்ளது.

2021 மே 2 அன்று ஒரு கிலோ ரூ 154 ஆக இருந்த வனஸ்பதியின் விலை தற்போது ரூ 141 ஆக 8 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x